Blogger இயக்குவது.
|புதிய நூல்கள்: தமிழர் பூமி - எதிர் வெளியீடு, 2017 |பேரினவாதத் தீ - யாவரும் பதிப்பகம், 2016 | எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது? - உயிர்மை பதிப்பகம், 2015 | எனது குழந்தை பயங்கரவாதி - விடியல் பதிப்பகம், 2014| தொடர்புகளுக்கு deebachelvan@gmail.com

திங்கள், 19 ஜனவரி, 2009

சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்

----------------------------------------------------------------------------
தீபச்செல்வன்
____________________________________

பொதிகளில் போட்டு அடைத்து வைத்திருக்கிற
வாழ்வை வெளியிலெடுக்க முன்பே
இந்தக் கிராமம் எழும்பி திசைகளற்று போகிறது.

விதியெனப்பட்ட வசங்களில்
கிராமங்கள் நிமிடங்களுக்குள்
மலை வீழ்வதுபோல வசப்பட
கொண்டு செல்ல முடியாத பொதிகள் அதிகரிக்கிறது.
விட்டு வந்தவை ஆடுகள் எனில்
வழி தவறியவர்கள் நாங்களாயிருந்தோம்.

உலகத்திற்கு அழுது காட்டுகிற
மூட்டை சுமக்கிற நிலமைகளில் கண்களற்றுப்போக
கண்ணீரில் மிதக்கிறது விதியெனில்
வீடுகள் இழந்தும்
வெளியில் வரதவர்களாய் இருந்தோம்.

மாடுகளை பட்டியில் விட்டு வர
படைகள் எல்லாவற்றையும் அடித்துத் தின்றனர்
தண்ணீருக்கு அலைகிற குழந்தையை கொண்டு
வலியை சுமக்க பாடு கொண்டவர்களாயிருந்தோம்.

எறிகனைகளிற்குள் தஞ்சமடைகிறது
நமதாய்ப்போன கொடிய விதியெனில்
நமதாயிருந்த ஊர்களை சுமந்து சென்று
கடலினுள் போட்டுக் கொண்டோம்.
சுமக்க வேண்டியவை தவறுப்பட்டு படைகளின்
கால்களுக்குள் மிதிபட
சந்ததிக்கு கையளிக்கிற பெரிய சுமைகள்
இழுபட்டு பின் தொடர்ந்தன.

ஆயுதங்கள் எல்லாவற்றையும்
கையாண்டு முடிக்கிற தேசத்தில்
அழுகை நசிகிறது.
அழுகையின் மிகப்பெரிய மூட்டை
இடுப்பிலும் தலையில் கால்களுக்கு பின்னாலும்
தொடர கொண்டு செல்ல வேண்டிய
பொதிகளை படைகள் கைப்பற்ற நாம் விட்டு வந்தோம்.

மறுக்கப்பட்ட வெளியில் வாழ
அனுமதி மறுத்து பிரகடனம் நிறைவேற்றப்படுகையில்
பலியிடக்காத்திருந்த
எறிகனைக்குள் ஒளிந்து கொண்டு
குழந்தையின் மூச்சை பொதியிலடைத்து
அதிகாரத்தின் கயிறுகள் கட்டுண்டவர்களாயிருந்தோம்.

படைகளிடம் சரணடைந்து
நிரந்தர பொதிகளை சுமக்கிறபோது
நமது பெரும் இனக் கூட்டத்தில்
சுமைகளின் பெரும் பொதிகள் விழுந்தன.

அதிகாரம் அடிமைக் கொடியினை திணித்து
சுற்றி வளைத்து பிடித்துக் கொள்ளுகிறது.
வழியில் தனிமை அதனை மிஞ்குகிற பாரத்துடன்
கைவிடப்பட்ட ஆடுகள் அவற்றை சுமக்கின்றன.

நமதெனப்பட்டவை எல்லாம் பொதிகளில்
அடைத்தபடி தொலைபட்டுப்போக
யாரோ என்பதுடன் சந்ததியின் அழுகைக்கான
பாரமான மிகவும் பெரிய பொதிகள்
குழந்தைகளது கைகளில் இருந்தன.
----------------------------------------------------------------------------
13.01.2009

2 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\"சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்"\\


தலைப்பே வலியோடு இருக்கு.

சகாராவின் புன்னகை சொன்னது…

தீபச்செல்வன்

//விட்டு வந்தவை ஆடுகள் எனில்
வழி தவறியவர்கள் நாங்களாயிருந்தோம்//

உமது தலைப்பின் பெரும் பொறுப்பை இந்தவரிகளே சுமந்துவிடுகின்றன, ஆரம்பவரிகளும் கூட அருமையானவை.

தொடர்ந்தும் எழுதுங்கள், உமது கவிதைகள் மிக நீழமானவையாகத் தெரிகிறது, காத்திரமான இறுக்கமான கவிதைகள் சுருக்கமானதாக இருப்பதே நல்லது என்பது எனது கருத்து

சிநேகத்துடன்
ப.அருள்நேசன்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...