Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஞாயிறு, 30 நவம்பர், 2008

முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி



இப்பொழுது மிஞ்சியிருக்கும்
பதுங்குகுழியில்
பெருமழை பெய்கிறது.

அறிவிக்கப்பட்டிருக்கும் வெற்றிக்கும்
தோல்விக்கும் இடையில்
எனது நகரத்தை
பிரிக்கும் சமரில்
நகரத்தின் முகம் காயமுற்றுக் கிடக்கிறது.

நாளை அது வீழப்போவதாய்
இராணுவத்தளபதிகள் சூளுரைக்கும்  இரவில்
பதுங்குகுழியின் ஒரு சுவர் கரைகிறது.

வெற்றி இலக்கில் அகப்பட்டிருக்கும்
எனது சந்தையில்
இறைச்சிக் கடைகளை
திறக்க காத்திருக்கின்றனர் படைகள்

நான் நேசிக்கும் நகரத்தின்
நான் குறித்திருக்கும் பதுங்குகுழியில்
முற்றுகையிடப்பட்ட
நகரக் கடைகள் ஒளிந்திருக்கின்றன.

கால்களுக்குள் அலையும்
வெற்றிச் சொற்கள்
ஒடுங்கியிருக்கும்
வீடுகளின் கூரைகளை
உலுப்பி களிப்படைகின்றன.

தூரத்தில் ஒரு சிறிய
நகரத்தில் நடக்கும் சண்டையில்
உடையும் பள்ளிக்கூடத்தைக் கைபற்றி
அதன் முகப்பில் நின்று
செய்தி வாசிக்கிற
படைச் செய்தியாளனின்
வெறித்தனமான வாசிப்பில்
பள்ளிக்கூட கிணறு மூடுப்படுகிறது.

முற்றுகையிடப்பட்ட பதுங்குகுழியில்
எரியமறுக்கிற விளக்கை
சூழ்கிற ஈசல்களை
பாம்புகள் தின்று நகர்கின்றன.

சனங்கள் வெளியேறிய பெருவீதிக்கு அருகே
கிடங்குகள் விழுந்த
மைதானத்தில் காற்று முட்டிய
பந்து கிடந்து உருள்கிறது
உலகம் விளையாடத் தெடாங்கியது.

மேலுமொரு சுவர் கரைகிறது.

படைகள் வளைத்து
முற்றுகையிடும் பொழுது
மழை சூழ்கிறது
கொண்டைகளை அறுத்தெரியும்
சேவல்கள் கூவ மறுக்கும்
அதிகாலையில்
படைகள் மேலும் நுழைய முனைகின்றன.

எல்லாச் சுவர்களும் அசைகின்றன

முன்னேற்றம் தடுக்கப்பட்ட
நகரத்தில்
சண்டையை மூட்டக் காத்திருக்கும் படைகளை
சனங்கள் கொதித்து ஏசுகிறபோது
வயல்களில்
கைப்பற்றப்பட்ட தெருக்கள் புதைந்தன.

படைகளிடம் வீழ்ந்திட முடியாத
எனது நகரத்தின் முகப்புக்காக
அலைகின்றன இராணுவக் கமராக்கள்.
0

தீபச்செல்வன்

27.11.2008, கிளிநொச்சி நகரத்தை நோக்கிய முற்றுகை முன்னேற்றேத்தை தொடங்கியது இலங்கைப் படைகள். 

2 கருத்துகள்:

தமிழ் மதுரம் சொன்னது…

வெற்றி இலக்கில் அகப்பட்டிருக்கிற
எனது சந்தையில்
இறைச்சிக் கடைகளை
திறக்க காத்திருக்கிற
படைகள் மண்மேடுகளில் மோத
சுவர்கள் அசைகின்றன.

பதுங்கு குழிக்குள் இருந்து எழுதும் உங்கள் எழுத்துக்களைப் படிக்கு போது நெஞ்சம் நெருடுகிறது. நாங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்ட பெரும் கோழைகள் அண்ணா. இத்தனை இடர்களின் மத்தியிலும் சாயது நிமிர்ந்து ஓயாது எழுதுகின்ற உங்கள் கவிதைகள் எத்தனை வீரியமானவை என்பதை உங்கள் ஒவ்வோர் எழுத்துக்ள் வாயிலாகவும் தரிசிக்க முடிகிறது அண்ணா. என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா. சிலவற்றினைப் பூடகமாகச் சொல்லும் உங்கள் கவிதை அழகே தனி....அன்புடன் மெல்போர்னிலிருந்து தம்பி கமல்.

sukan சொன்னது…

கொடுமையான காலத்தின் கணங்களை அதனிருந்து விலகாமல் பதிவு செய்கின்றீர்கள். தொடருங்கள்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...